வள்ளிக்கண்ணன் மருதப்பன்: 2026–2028 பேரவை செயலாளர் வேட்பாளர்
தமிழர் சமூகப் பணியில் சிலர் பெயரால் அறியப்படுகிறார்கள்.
சிலர் பதவியால் அறியப்படுகிறார்கள்.
ஆனால் மிகச் சிலர் மட்டுமே தங்கள் செயலால் அடையாளமாகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெயர் — வள்ளிக்கண்ணன் மருதப்பன்.
இன்று பேரவை 2026–2028 செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் இவர், தற்போதைய பேரவை பொருளாளராக செயல்பட்டு, அமைப்பின் நிதி நிர்வாகத்தில் ஒரு புதிய ஒழுங்கையும் நம்பகத்தன்மையையும் உருவாக்கியுள்ளார்.
சமூகப் பணியின் விதை — குடும்பப் பின்னணி
வள்ளிக்கண்ணனின் தந்தையார் அமரர் மருதப்பர் அவர்கள் அரிமா சங்க உலகில் அறியப்பட்ட சமூகப் போராளி. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பணியில் ஈடுபட்ட அவர், ஆசியாவில் மிகப் பெரிய மதுரை நகர் அரிமா சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளிலும் உலகிலே முதன்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
தமிழ், சமூகப்பணி, ஒழுக்கம், பொறுப்பு — இவை அனைத்தையும் தனது தந்தையாரிடமிருந்தே கற்றுக்கொண்டவர் வள்ளிக்கண்ணன்.
தமிழ்ப்பற்று உருவான விதம்
- ஆங்கில வழிக் கல்வியில் பயின்றபோதும், அவரது தாயார் சிறப்பு வகுப்புகள் மூலம் தமிழைக் கற்றுத்தந்தார். அதுவே அவரின் தமிழ்ப்பற்றை ஆழமாக மாற்றியது.
- திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் போன்ற தமிழ் தேசிய ஆளுமைகள் குறித்து பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல விருதுகளை பெற்றுள்ளார்.
- தமிழ் அவருக்கு ஒரு மொழி அல்ல. அது ஒரு அடையாளம்.
மாணவர் பருவத்திலேயே சமூகப் போராளி
- 1983–84 காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் அவரை ஆழமாகத் தொட்டது. 12 வயதிலேயே தமிழீழ உணர்வுடன் சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்.
- பெங்களூரில் கல்லூரி கல்வி கற்ற காலத்தில், கர்நாடகத் தமிழர்களுடன் இணைந்து தமிழ் அமைப்புகளில் செயல்பட்டார். காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைப் போராட்டங்களில் மாணவர் பருவத்திலேயே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் போன்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.
கனடாவில் உருவான தமிழ் இயக்கம்
- 2001ஆம் ஆண்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்த பின்னரும் சமூகப்பணி தொடர்ந்து கொண்டே இருந்தது.
- 2013ஆம் ஆண்டு “கனடா தமிழ்ச் சங்கம்” அமைப்பைத் தன் மனைவியுடன் இணைந்து நிறுவினார்.
- இன்று உலகத் தமிழர்களை இணைக்கும் அமைப்பாக வளர்ந்துள்ள கனடா தமிழ்ச்சங்கம், உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஆளுமைகளை கௌரவித்துள்ளது. அதில் பெரும்பாலானோர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழ் மரபு மாநாடுகள்
- 2017, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் மிகப் பிரம்மாண்டமான தமிழ் மரபு மாநாடுகளை கனடா டொராண்டோவில் நடத்தினார்.
- ஈழ இனப்படுகொலை, ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட தமிழர் பிரச்சினைகளுக்கு கனடாவில் இருந்து குரல் கொடுத்ததோடு, டொராண்டோவில் நடைபெற்ற போராட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார்.
கொரோனா காலத்தின் மனிதநேயம்
- கொரோனா காலத்தில் உலகிலேயே முதன்முறையாக 5 மணி நேர மெய்நிகர் கலை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியவர்.
- 5 வாரங்கள் தொடர்ந்து மெய்நிகர் நிகழ்ச்சிகளை நடத்தி, நாட்டுப்புற மற்றும் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு துணைநின்றார்.
- மக்கள் மனஅழுத்தத்திலும் அச்சத்திலும் இருந்த நேரத்தில், பல தமிழ்ச் சங்க பேச்சாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து, புரட்சிகர சிந்தனைகள், குடும்ப உறவுகள், சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 25 வரங்களுக்கும் மேல் மெய்நிகர் பட்டிமன்றங்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து நடத்தினார். அந்த நிகழ்ச்சிகள் மக்களுக்கு மனஉற்சாகத்தையும் தமிழரிடையேயான இணைப்பையும் உருவாக்கிய குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைந்தது.
- அதுமட்டுமல்லாமல் அவரது குடும்பம் 10 வாரங்களுக்கு சுமார் 100 மாணவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகளை நேரடியாக வீடுகளுக்குச் சென்று வழங்கியது.
- மேலும் இந்தியாவில் 50 நாட்டுப்புற மற்றும் இசைக் கலைஞர்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டது.
பேரவையில் செயலால் நிரூபித்த தலைவர்
- 2005ஆம் ஆண்டு முதல் பேரவை மாநாடுகளில் குடும்பத்துடன் பங்கேற்று வருகிறார்.
- 2024–2026 காலகட்டத்தில் பேரவை பொருளாளராக பொறுப்பேற்ற அவர், வெறும் 30 நாட்களுக்குள் முழுமையான நிதி நிர்வாகத்தை கையாளத் தொடங்கினார்.
- கனடா குடியுரிமையாளர் என்ற நிலையிலும் அமெரிக்காவிற்கு பலமுறை பயணம் செய்து வங்கி கணக்குகளின் முதன்மை கையொப்ப அதிகாரியாக பொறுப்பேற்றது — அவரது அர்ப்பணிப்பின் சான்று.
பேரவையில் பொருளாளராக (2024-2026) நிதி நிர்வாகத்தில் புரட்சிகர மாற்றங்கள்
- பேரவை 2024–2026 பொருளாளராக முழுமையான நிதி நிர்வாக மாற்றங்களை கொண்டு வந்தவர்
- 3000-க்கும் (4 மில்லியன் டாலர்கள்) மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட கணக்கியல் நடைமுறையை உருவாக்கியவர்
- பேரவை வரலாற்றில் முதன்முறையாக மென்பொருள் அடிப்படையிலான கணக்கியல் முறையை அறிமுகப்படுத்தியவர்
- ஒவ்வொரு செலவிற்கும் அனுமதி, ரசீது, பணப்பரிமாற்ற உறுதி இணைந்த ஆவண காப்பக முறையை தொடங்கியவர்
- காலாண்டு பொதுக்குழுக் கூட்டங்களில் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்த வாழபொருளாளர்
- தொழில்முனைவோர் மாநாடுகளின் கணக்குகளை தனித்தனியாக பொதுக்குழுவில் சமர்ப்பித்த முதல் பொருளாளர்
- நியூயார்க் மாநாடு 2022 கணக்குகளில் இருந்த முரண்பாடுகளை சரிசெய்து பெரும் தொகையை சேமித்தவர். நியூயார்க் தமிழ்ச் சங்கத்திற்கு நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தொகையை உடனடியாக அச்சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
- தாய்த் தமிழ் பள்ளிகளுக்கான நிலுவை நிதி வழங்கல்களை முன்னெடுத்து செயல்படுத்தியவர்
- கடந்த இரண்டு ஆண்டுகளில் செலவுக் கட்டுப்பாடு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் பெரும் தொகை சேமித்தவர்
- எதிர்கால பொருளாளர்களுக்கான கணக்கியல் நடைமுறை வழிகாட்டி உருவாக்க முனைந்தவர்
- 2020 மெய்நிகர் மாநாட்டின் தொழில்நுட்பக் குழுவில் இணைந்து செயல்பட்டவர்
- 2025 மாநாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றியவர்
- பேரவை – தமிழ்நாடு அரசு இணைப்புக் குழுத் தலைவராக செயல்படுபவர்
- தமிழ்நாட்டில் அயலகத் தமிழர் மாநாடுகளில் பேரவைக்கான முழுமையான அரங்குகளை ஒருங்கிணைத்தவர்
- வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு வாட்ஸ்ஆப் குழுவின் நிர்வாகியாக நண்பர்களுடன் தொடர்ந்து செயல்படுபவர்
உண்மை, வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகத்தை முன்னெடுத்தவர் இதன் மூலம் கணக்கியல் வெளிப்படைத்தன்மைக்கு புதிய அளவுகோல் அமைக்கப்பட்டது.
செலவுக் கட்டுப்பாட்டில் சாதனை
- “சரியான கொள்முதல் தான் மிகப்பெரிய சேமிப்பு” — இது அவரது தந்தையார் கற்றுக் கொடுத்த கொள்கை.
- அதனை நடைமுறைப்படுத்தி உணவு, அரங்கு, ஒலி-ஒளி, அச்சு, நினைவுப்பரிசுகள் போன்ற பல துறைகளில் விற்பனையாளர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியும் மற்றும் சில நிதி ஒழுங்கு முன்னெடுப்புகளையும் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருந்தொகையை சேமிப்பாக ஏற்படுத்தியுள்ளார்.
ராலே பேரவை விழா 2025-இல்:
- குழந்தைகளுக்கான தரமான பதக்கங்கள்
- சான்றிதழ்கள்
- நினைவுப் பரிசுகள்
- பேரவை இலச்சினை காஷ்மீர் ஷால்கள்
- பேரவை இலச்சினை பேட்ஜ்கள்
- விருந்தினர்களுக்கு குளிரூட்டும் பைகள்
என மிகக் குறைந்த செலவில் உயர்தரமாக வழங்கப்பட்டன.
உலகத் தமிழரை இணைத்த பாலம்
- 2016ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களை இணைக்கும் வாட்ஸ்ஆப் குழுவை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார்.
- இன்று அந்த இணைப்பு பல பேரவை குழுக்களின் உருவாக்கத்திற்கும், உலகத் தமிழர் ஒருங்கிணைப்பிற்கும் அடித்தளமாக உள்ளது.
தமிழ்நாடு அரசுடன் இணைப்பு
- 2024–2026 தற்போது பேரவையின் தமிழ்நாடு அரசு குழுத் தலைவராக பணியாற்றுகிறார்.
- 2025 மற்றும் 2026 சென்னை அயலகத் தமிழர் மாநாடுகளில்; முழுமையான பேரவைக்கான அரங்கத்தை அமைத்து ஆயிரக்கணக்கான உலகத் தமிழர்களிடம் பேரவைவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பெற்ற விருதுகள்: அவரது தமிழ், சமூக மற்றும் மனிதநேயப் பணிகளுக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் இதோ சில:
- மனிதத்தேனீ விருது 2009
- தமிழன்பன் விருது 2019
- கோவிட் ஹீரோஸ் விருது 2020
- தொண்டுச் செம்மல் விருது 2020
- மாமனிதன் விருது 2021
- உலகத் தமிழ் ஒளி விருது 2022
ஏன் வள்ளிக்கண்ணன் மருதப்பன்?
ஏனெனில்…
அவர் பேசுவதற்கு முன் செய்கிறார்
செய்த பிறகே பேசுகிறார்
பதவிக்காக வரவில்லை
பொறுப்புக்காக வந்துள்ளார்!
உண்மை – வெளிப்படைத்தன்மை – நம்பிக்கை!
இதுவே அவரது பயணத்தின் அடித்தளம்.
பேரவை 2026–2028
செயலாளர் பதவிக்கு
வள்ளிக்கண்ணன் மருதப்பன்
“ஒன்றுபட்ட தமிழர் – ஒழுங்குபடுத்தப்பட்ட பேரவை – வெளிப்படையான நிர்வாகம்”




